வீட்டுக் கடன் EMI கணக்கீடு
வீடு வாங்கும் முன்பே மாதத் தவணை, மொத்த வட்டி மற்றும் மொத்தச் செலுத்த வேண்டிய தொகையை அறிந்து கொள்ளுங்கள்.
சரியான எண்களை உள்ளிட விரும்புகிறீர்களா?
எண்களை உள்ளிடுங்கள் — முடிவை பகிரக்கூடிய இணைப்புடன் பக்கம் மீண்டும் ஏற்றப்படும்.
கணக்கீட்டு சூத்திரம்
எல்லா இந்திய வங்கிகளும் இதே reducing-balance சூத்திரத்தையே பயன்படுத்துகின்றன.
- P — அசல், நீங்கள் வாங்கும் கடன் தொகை (₹50,00,000)
- r — மாத வட்டி விகிதம்: ஆண்டு விகிதத்தை 12-ஆலும் 100-ஆலும் வகுத்தது (8.5% ஆண்டுக்கு)
- n — மாதத் தவணைகளின் எண்ணிக்கை (20 ஆண்டு = 240 மாதம்)
முடிவை எப்படிப் புரிந்துகொள்வது?
கையெழுத்திடும் முன் தெரிந்திருக்க வேண்டிய மூன்று விஷயங்கள்.
காலம் நீளும்போது EMI குறையும், ஆனால் மொத்தச் செலவு கூடும். அதே கடனை 15-இல் இருந்து 25 ஆண்டுகளுக்கு நீட்டித்தால் மாதச் செலவு குறையும் — ஆனால் பத்து ஆண்டுகள் கூடுதலாகச் செலுத்துவதால் மொத்த வட்டி கணிசமாக உயரும்.
வங்கிகள் EMI-ஐ நிகர வருமானத்தில் 40–50% வரையே அனுமதிக்கும். மேலே உள்ள தொகை உங்கள் மாத வருமானத்தில் பாதிக்கு மேல் இருந்தால், குறைவான கடன் ஒப்புதலே கிடைக்கும்.
பதிவுச் செலவு தனி. தமிழ்நாட்டில் முத்திரைத் தீர்வையும் பதிவுக் கட்டணமும் கடனில் சேராது — முன்பணத்துடன் சேர்த்து அந்தத் தொகையையும் தயாராக வைத்திருங்கள்.
மாறும் (floating) விகிதங்கள் — வழிகாட்டலுக்காக மட்டுமே. தற்போதைய விகிதத்தை உங்கள் வங்கியில் உறுதி செய்யவும்.
கடன் ஏற்பாட்டில் உதவி வேண்டுமா?
SBI, HDFC, ICICI வங்கிகளின் வீட்டுக் கடன் அதிகாரிகளுடன் வாரந்தோறும் இணைந்து செயல்படுகிறோம் — தகுதி, ஆவணங்கள், ஒப்புதல் காலம் அனைத்திலும் உங்களுக்கு வழிகாட்டுகிறோம்.